ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் செய்தி
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் படக்குழுவினர் நீதிமன்றத்துக்கு சென்றனர்.

இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்காமல் இழுபறியானதால், வழக்கை வாபஸ் பெற்று, ரிவைசிங் கமிட்டிக்கு சென்றனர். ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்துவிட்டு சென்சார் சான்றிதழ் எப்போது கொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில், வருகிற மார்ச் 9ஆம் தேதி ஜனநாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கப்போவதாகவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஜனநாயகன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.