ரஜினி, கமல், அஜித்திற்கு போட்டியா இப்படியொரு பிளான் போட்ட விஜய்!! பெரிய சம்பவம் செய்யபோகும் லோகி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் மிகப்பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
ஏற்கனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை இணையத்தில் வைரலாகி விவாதபொருளாக மாறிய நிலையில் விஜய் இதுவரை செய்யாத ஒரு சம்பவத்தை செய்யவுள்ளாராம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளதாம்.
படத்தின் நீளம் 6 மணிநேரமாக இருப்பதால் அனைத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக லோகேஷ் இப்படியொரு முடிவெடுத்திருக்கிறாராம்.
இதுவரை அஜித், கமல், ரஜினி, சூர்யா உள்ளிட்டவர்கள் மட்டுமே பார்ட் மூவிஸ் எடுத்து வந்த நிலையில் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் முதல் முதலாக பார்ட் மூவிஸில் இணைந்திருப்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் #Leo2 ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.