நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் விஜய்யின் ரகசிய காதலி.. இளம் நடிகைக்கு அடித்த லக்
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய்யுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாகவும், கதாநாயகியாகவும் யார் நடிக்க போகிறார் என்று இதுவரை படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியிருப்பதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டவுடன் சில வருடங்களாக ரகசிய காதலில் இருந்து வருகிறார் என்று திரை வட்டாரங்களில் பேச்சு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.