விஜய்யின் ஜனநாயகன் பட வியாபாரம்!! மாஸ்டர் பிளான் போட்ட தளபதி...
ஜனநாயகன் பட வியாபாரம்
தளபதி விஜய்யின் கடைசி படமாக இருக்கும் ஜனநாயகன் படம் பொங்கல் தினத்தன்று திரையிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் மிகப்பெரியளவில் விற்பனையாகி வருகிறது. அப்படி திரையரங்க உரிமையை போட்டிப்போட்டு வாங்க முன் வந்த நிலையில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு தான் ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ. 100 கோடி
ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை மட்டும் ராகுல் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் கேரளா ரைட்ஸையும் ஹான் நிறுவனர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியான தகவல்படி ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுடன் இணைந்து ஜெகதீஷும் ஜனநாயகன் ரைட்ஸை வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ், தளபதியின் படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளா திரையரங்க உரிமையை ராகுலுடன் ஜெகதீஷும் சேர்ந்து வாங்கியிருப்பதாக தகவல் அடிப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
விஜய்யின் கோட் படத்தினை ராகுல் நிறுவனம் தான் விநியோகம் செய்திருப்பது மட்டுமில்லாமல் ஹெச் வினோத்திற்கும் ராகுல் நெருக்கம் என்பதால் தான் ஜனநாயகன் உரிமையை ராகுலுக்கு தர சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய்.
அரசியல் செயல்பாடுகளால் ஜனநாயகன் பட ரிலீஸுக்கு சிக்கல் வரக்கூடாது என்பதால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருக்கும் ராகுல் இப்படத்தின் உரிமையை வாங்கினால் பிரச்சனை வரக்கூடாது என்பதால் அவருக்கு விற்பனை செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.