சங்கீதாவுக்கு முன் விஜய்க்கு பார்த்த பெண் அவர் தான்!! பயில்வான் உடைத்த ரகசியம்..
பயில்வான்
தமிழ் சினிமாவை தாண்டி சினிமா பிரபலங்களில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் மோகன் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். ஆரம்பத்தில் அவருக்கு தமிழ் தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது என்ற விஷயமே இன்றுவரை பலருக்கும் தெரியாது. அந்தளவிற்கு அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ் என் சுரேந்தர்.
சங்கீதாவை முன் விஜய்க்கு பார்த்த பெண்
விஜய்யின் தாய் மாமன், அதாவது ஷோபாவின் சகோதரர்தான் சுரேந்தர். இந்த சுரேந்தரின் மகளைத்தான் விஜய் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால் சங்கீதாவை விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுரேந்தர் சிறந்த பின்னணி பாடகர். அப்படிப்பட்டவர் குரல் கொடுத்ததால் தான் மோகன் பெரியளவில் புகழ் கிடைத்தது.
ஆனால் மோகன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காகதான் அவர் சொந்த குரலில் பேசி நடிக்க ஆரம்பித்ததால் அவர் மார்க்கெட்டை இன்னும் சறுக்கியது. யார் வம்புக்கும் செல்லாமல் சர்ச்சையிலும் சிக்காத ஜெண்டில்மேன் தான் மோகன் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.