விஜய் சிகரெட் பிடிக்கும் போது பக்கத்தில் நான் தான் இருப்பேன் உண்மையை உடைத்த பிரபலம்..

Vijay
By Jai May 11, 2022 10:00 PM GMT
Report

முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் படம் வெளியானது. இப்படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து வருகிறார் விஜய்.

விஜய் பற்றிய சில விஷயங்களை அவருடன் பணியாற்றி நட்சத்திரங்கள் பேட்டிகளில் பகிர்ந்து கொள்வதுண்டு. அப்படி ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதிலிருந்தே விஜய்யுடன் ஒளிப்பதிவாளராக இருக்கும் சமயத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் போது நான் தான் கம்பெனி குடுப்பேன்.

தனியாக அவர் சென்றாலும் உடனே நான் தான் அவருடன் செல்வேன். இடையில் ஷூட்டிங்கின் போது அவரது நண்பர்கள் 4 பேர் வந்தார் அவர்களுடன் மட்டுமே பேசுவார் தற்போது அப்படியே மாறியுள்ளார். ஹீரோயின்களுடன் பேசவே மாட்டார் என்று கூறியுள்ளார்.