விஜய் தவறவிட்ட 6 படங்கள்! தளபதியை அதிரவைத்த மாஸ்டர் கதைகளம்..
தமிழில் உச்ச நடிகர் என்று சொன்னாலும் வரும் கால சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து காணாப்படுப்பவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைத்து தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்யிடம் வாய்ப்பு கேட்டு வந்த சில இயக்குனர்கள் படம் கடைசியில் பெரிய சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அந்த படங்கள் வரிசையில் முதலில் இருப்பது உன்னை நினைத்து.
விக்ரமன் இயக்கத்தில் 2002ல் வெளியான திரைப்படம் உன்னை நினைத்து. இப்படத்தில் முதலில் தளபதி விஜய் நடித்து இருந்தார். பிறகு, ஒரு பாடலுக்காக இரண்டு நாள் சூட்டிங் போனது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்திலிருந்து விஜய் விலகினார். பிறகு இப்படத்தில் சூர்யா நடித்து, படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இதையடுத்து, இயக்குனர் சங்கரின் முதல்வன் படம். அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படத்தின் கதையை சங்கர் முதலில் ரஜினியிடம் கூறினார். அவர் மறுத்த காரணத்தினால், பின்பு கமலஹாசனிடம் சொல்ல அவரும் இப்படத்தை மறுத்துவிட்டார்.
ரஜினி, கமல் இருவரும் நிராகரித்த பிறகு விஜய் அணுகி முதல்வன் பட கதையை ஷங்கர் சொன்னார். அப்போது அரசியல் படங்களில் நடிக்க விஜய் மறுத்துவிட்டார்.
தொடர்ந்து, லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரன். இப்படத்தில் ரகுவரன், அதுல் குல்கர்னி, அனுஹாசன், விவேக் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இயக்குனர் லிங்குசாமி முதலில் விஜய்யிடம் இப்படத்தின் கதையை சொல்ல சில காரணங்களால் இப்படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போனது. பிறகு இப்படத்தில் மாதவன் நடித்து நல்ல வரவேற்பு பெற்றது.
2004இல் சேரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில் சினேகா, கோபிகா என பலர் நடித்திருந்தார்கள். முதலில் இப்படத்தில் நடிக்க விஜயை அணுகினார் சேரன்.
இப்படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டார். பிறகு, இப்படத்தில் சேரனே ஹீரோவாக நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடு தேசிய விருதும் பெற்றது.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் என பலர் நடித்து வெளியான திரைப்படம் சண்டக்கோழி. இயக்குனர் லிங்குசாமி முதலில் சூர்யாவிடம் இப்படத்தின் கதையை சொன்னார். அவர் மறுக்க பின்பு விஜயிடம் சொல்ல அவரும் நிராகரித்து விட்டார்.
பிறகு இப்படத்தில் நடிக்க விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மற்ற மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இயக்குனர் ஹரி இப்படத்தின் கதையை சொல்ல முதலில் விஜய் நாடினார்.
விஜய், இதுபோன்ற போலீஸ் கெட்டப் எனக்கு செட்டாகாது என மறுத்துவிட்டார். பின்பு இப்படத்தின் வாய்ப்பு சூர்யாவுக்கு செல்ல படம் பெரிய அளவில் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. இது போல் விஜய் சில முக்கிய படங்களை விட்டுவிட்டு சில சமயம் தோல்வியை கொடுத்து வந்தார். இருப்பின் தற்போது வரை மாஸ்டர் பிளாஸ்டர் தான் தளபதி.