கடன் தொல்லையால் கேட்பாரற்று கிடந்த விஜய் பட தயாரிப்பாளர்? 81 வயதாகியும் அசராத வில்லாதி வில்லன்!!
தமிழ் சினிமாவில் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் கரிமேடு கருவாயன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியவர் சங்கிலி முருகன். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் வந்த இவர் தேவர் மகன் படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த காட்சி நல்ல வரவேற்பு பெற்றது.
இதன்பின் எங்க ஊரு காவக்காரன், பெரிய வீட்டு பணக்காரன், பெரிய மருது போன்ற படங்களை தயாரித்து ஹிட் கொடுத்தார். அதன்பின் நடிகர் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தினை தயாரித்து ஹிட் கொடுத்தார்.
இதையடுத்து விஜய்யை வைத்து சுறா படத்தினை தயாரித்து பெரியளவில் நஷ்டத்தை சந்தித்தார். தற்போது 80 வயதினை தாண்டிய சங்கிளி முருகன் இன்று வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மண்டேலா, கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற படங்களில் கூட சமீபத்தில் நடித்துள்ளார். சுறா படத்தின் நஷடத்தால் கடன் நெருக்கடியில் சங்கிலி முருகன் சிக்கியதால் தயாரிப்பை விட்டுவிட்டாராம். முதிர்ந்த காலத்திலும் தற்போது அவர் நடித்து வருவது பலருக்கு ஆச்சரியமாகவுள்ளது.