பணமா? அரசியலா? தளபதி விஜய் தேர்ந்தெடுக்க போகும் வழி இதுதான்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 100 கோடி சம்பளமாக பெரும் விஜய்யின் மார்க்கெட் அதிகரித்தை தொடர்ந்து தளபதி 68 படத்திற்காக 200 சம்பளமாக பெறவுள்ளார் என்ற தகவல் வெளியானது.
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று பிரபலங்களும் ரசிகர்களும் பேசி வருகிறார்கள். அதை எதிர்காமலும் இருந்து வருகிறார் விஜய். சினிமாவில் இப்படி என்றால் விஜய்யின் பெயர் அரசியல் களத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக அரசியல் களங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகள் பல விசயங்களை செய்து வருகிறார்கள். சமீபத்தில் கூட அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை விஜய் சந்திக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
அப்படி விஜய் அரசியலில் வந்துவிட்டால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும், அதிலும் ஒதுங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டும். அப்படி விஜய் அரசியலை தேர்வு செய்து ஒதுக்கினார் சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து 100க்கும் மேல் சம்பளம் வாங்கும் நிலையை இழக்க நேரும்.
என்னதான் ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் அரசியலில் வெற்றிபெற அதுமட்டும் போதாது. பல நடிகர்கள் அரசியலில் இன்றுவரை வெற்றிக்காணாமல் வருகிறார்கள். பண தேவையில்லை என்று பதிவி இருந்தால் போது என்ற முடிவுக்கு இப்போதைக்கு விஜய் வரமாட்டார் என்று சினிமா விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.
இதற்கு முழு தீர்வு 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் வெட்ட வெளிச்சமாக தெரியவர்ரும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.