பீஸ்ட் இந்த படத்தின் காப்பியாக உருவாகுதா? ரசிகர்களை கோபத்தை ஏற்படுத்திய தகவல்!

vijay master nelson beast jamespand
By Edward Jun 27, 2021 06:12 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவரை மக்கள் அவர்களுடைய மனதில் இளைய தளபதி என்று எப்போதும் அழைத்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் விஜயின் பிறந்த நாளுக்கு வெளியான விஜய் நடித்த ”பீஸ்ட்”படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) வெளியாக சமூக வளைதளங்களில் ரசிகர்களின் மனதையே கொள்ளையடித்தது. இதை டிவிட்டரில் சாதனை நிகழ்த்தியும் அசத்தினார்கள் தளபதி ரசிகர்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்போது “பீஸ்ட்” திரைப்படம் தொடர்பாக மேலும் ஒரு செய்தியும் தளபதி ரசிகர்களுக்காக படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரால் வெளியிடப்பட்டது. அதன்படி படத்தின் அமைப்பு ஹாலிவுட்டிற்கு நிகராக இருக்கவேண்டும் என்றும் இயக்குனர் நெல்சன் பிடிவாதமாக இருக்கிறாராம்.

அப்படியே அவரின் சிந்தைக்கான செயல்பாடாக படக்குழுவும் அவரை திருப்திப்படுத்தும் வகையில் அவுட்புட் கொடுத்து வருகிறது. எப்படி இருந்தாலும் ரசிகர்களின் மனதை எப்படியாவது விஜய் மூலம் பிடிக்கவேண்டும் என்று நெல்சனின் எண்னம் தான்.

அதன்படி மாஸ்டர் அன்பறிவு கூறுகையில் பீஸ்ட் தமிழில் வெளியாகும் ஜேம்ஸ் பாண்ட் படம் என்றும் இதுவரை கண்டரியாத அளவிற்கு படத்தின் தன்மை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் படம் எப்படி இருந்தாலும் இளைய தளபதியின் படம் என்று மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.