திராவிட மாடலை கலாய்த்த விஜய்யா அப்படி பேசினார்!! வைரலாகும் பழைய வீடியோ.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய், தன்னுடைய 69வது படத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அதன்பின் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
அக்கட்சியின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான மக்கள் சூழ மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
திராவிட மாடல்
அதிலும், மக்கள் விரோத ஆட்சியைத் திராவிட மாடல் ஆட்சின்னு சொல்லிட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அடுத்த எதிரி என்று பேசியிருந்தார் விஜய். இதற்கு பல ஆதரவளித்து கருத்துக்களை கூறி வந்தாலும் விஜய்யை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
கலைஞர் ஐயா குடும்பம்
அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் விஜய், உதயநிதி, தயாநிதி, அருள்நிதி, தமிழரசு, கனிமொழி என்ற பெயர்களை கேட்கும் போது என் படத்தில் டைட்டில் வைக்க வேண்டும், அப்படியொரு பவர்ஃபுல்லான பெயர்கள்.
இந்தியாவிலேயே பரம்பரை பரம்பரையா பேர் சொல்லும் குடும்பம் என்றால் ஜவர்ஹர்லால் நேரு அவர்களுடைய குடும்பம். தமிழ்நாட்டில் பேர் சொல்லும் குடும்பம் என்றால் அது நம்ம கலைஞர் ஐயா குடும்பம் தான் என்று கூறியிருக்கிறார். இதனை வைத்து நெட்டிசன்கள் விஜய்யின் பேச்சை கலாய்த்து வருகிறார்கள்.
Kithnaa vaai da.. pic.twitter.com/rvAcGUfqUd
— Trollywood 𝕏 (@TrollywoodX) October 27, 2024