திருமணத்திற்கு பின் சங்கீதா அதைவிட்டுவிட்டார்..வேஸ்ட்னு நினைத்துவிட்டார்!! விஜய் மனைவி குறித்து இப்படி பேசியிருக்காரா?
விஜய் - திரிஷா
தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தார். அவர் விவாகரத்து மனுதாக்கல் செய்த சில நாட்களில் நடிகர் விஜய் - திரிஷா இருவரும் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்ற விவகாரம் இன்று வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பலர் இதுகுறித்து விமர்சித்து பேசி வரும் நிலையில், இதுகுறித்து எதுவும் பேசாமல், ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சனையெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது என்று அசால்ட்டாக பேசியிருந்தார்.
திருமணத்திற்கு பின் சங்கீதா
இந்நிலையில், சங்கீதா பற்றி விஜய் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று திடீரென இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய், திருமணமான புதிதில் சங்கீதா எனக்காக நிறைய கிஃப்ட்டுகள் எல்லாம் வாங்கி தருவார்.

ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அதைவிட்டுவிட்டார். இவருக்கு செய்வது வேஸ்ட் என நினைத்து நிறுத்திவிட்டார். இப்போது எதுவுமே செய்வதில்லை. என்னை ரொம்பவே புரிந்திருக்கிறார்.
என்னுடைய படம் பற்றி ஓபனாக சொல்லிவிடுவார். சங்கீதா சொன்னால் சரியாகத்தான் இருக்கும், என் வாழ்வின் அனைத்திலும் அவருடைய பங்கு நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார் விஜய். இப்படி சொல்லிவிட்டு விஜய் திரிஷா பக்கம் போனது நியாயமா என்று பலரும் இணையத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.