அம்மா, சங்கீதா-லாம் கிடையாது, அவர் தான்.. திரிஷா முன்பே ஓப்பனாக பேசிய விஜய்...
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதற்கிடையில் விஜய் பற்றி தவறான கருத்துக்கள் இணையத்தில் கசிந்தும் வருகிறது. அரசியலில் நுழையவிருக்கும் விஜய் தன் குடும்பத்தினரை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருவதாகவும் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து கொடுத்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்டியெடுத்த அனு, திரிஷாவிடம் சமைக்க தெரியுமா என்று கேட்க, சுத்தமாக தெரியாது என்று கூறியிருக்கிறார். அதேபோல் விஜய்யிடம், உங்களுக்கு பிரியாணி பிடிக்குமே மட்டனா, சிக்கனா என்று அனு கேட்க, மட்டன் பிரியாணி என்று கூறியிருக்கிறார்.
எல்லாத்துக்குமே திட்டிக்கிட்டு தான் இருப்பாள்!! திரிஷா முன்பே மனைவி சங்கீதா பற்றி ஓப்பனாக பேசிய விஜய்..
மேலும் கேள்வி கேட்ட அனு, உங்க மனைவி சங்கீதா பண்ற பிரியாணி நல்ல இருக்குமா, அம்மா பண்ற பிரியாணி நல்ல இருக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் உடனே, என் குக் பழனி பண்ற பிரியாணி என்று கூறி வாயடைத்திருக்கிறார். அவர் சூப்பராக பண்ணுவார், அவர் பிரியாணிக்காக நாள் முழுவதும் பட்டிணியாக இருக்கலாம்.
விஜய் - திரிஷா நேர்காணல் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..
You May Like This Video