எல்லாத்துக்குமே திட்டிக்கிட்டு தான் இருப்பாள்!! திரிஷா முன்பே மனைவி சங்கீதா பற்றி ஓப்பனாக பேசிய விஜய்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதற்கிடையில் விஜய் பற்றி தவறான கருத்துக்கள் இணையத்தில் கசிந்தும் வருகிறது. அரசியலில் நுழையவிருக்கும் விஜய் தன் குடும்பத்தினரை கண்டுக்கொள்ளாமல் இருந்து வருவதாகவும் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து கொடுத்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ஜோதிகா, திரிஷா, அசினுடன் ஜோடியாக நடித்தால் எந்த ஜோடி நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள் விஜய் - திரிஷா ஜோடிதான் நல்லா இருக்கு, பக்கத்தில் இருக்கிறார்களே வேறென்ன சொல்றது என்று கூறியிருக்கிறார்.
அஜித்திடம் தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மனைவியிடம் அடிக்கடி திட்டு வாங்கும் விசயம் என்ன என்ற கேள்விக்கு அவள் எல்லாத்துக்குமே திட்டிக்கிட்டு தான் இருப்பாள் என்று ஓப்பனாக பதிலளித்திருக்கிறார் நடிகர் விஜய்.
மேலும் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, யாருக்கு தெரியும் என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..
You May Like This Video