51 இடங்களில் வெற்றிகண்ட விஜய் மக்கள் இயக்கம்.. நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வர அடித்தளமா
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் காலை எட்டு மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.ஆளும் கட்சியாக உள்ள திமுக அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக-க்கு படுதோல்வியாய் அமைந்துள்ளது. பல வருடங்களாக நடந்த வரும் பல கட்சிகள் இதில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.ஆம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 49 பேர் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.
நடிகர் விஜய் நேரடி அரசியலுக்கு வருவதற்கான அடித்தளமாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. தேர்தல் வெற்றியை சமூக வலைதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள், தளபதி விஜய் இனியும் தாமதிக்காமல் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.