பராசக்தி படத்திற்கான சென்சார் சான்று!! முடிந்ததா இல்லையா? தற்போதைய நிலை இதானாம்..
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் தான் பராசக்தி. ஜனநாயகன் 9 ஆம்தேதி ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்சனையில் படத்தில் ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளது.
ஆனால் இன்னும் பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. ஆனால் எப்படியும் சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரு படங்களும் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் மும்முரமாகவும் இருக்கிறார்கள். ரவி மோகன், சிபி சத்யராஜ், சனம் ஷெட்டி, இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட சிலர் மட்டுமே ஜனநாயகன் படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்.
பராசக்தி சென்சார்
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து செய்தியாளர்கள் பேசியுள்ளனர். அதில், தணிக்கை குழு ஒன்றிய அரசுடையது. அவர்கள் நிறைய மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பான் இந்தியா படங்களுக்கு ஒரே நேரத்தில் அத்தனை மொழிகளிலும் சென்சார் கொடுக்கிறார்கள்.
இதுமாதிரியான திட்டங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஒருவாரம் முன்பே டிக்கெட் புக்கிங் தொடங்க வேண்டியிருக்கிறது. சென்சார் சான்றிதழ் வந்தால் தான் டிக்கெட் புக்கிங்கை ஆரம்பிக்கும் நிலைமையும் உண்டு. அனைத்தையும் பார்த்துதான் அவர்கள் சான்று வழங்குகிறார்கள். படத்தை நிறுத்தி வைப்பது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்புள்ளது.

இரு
படங்களில் ஜனநாயகன் கோர்ட்டில் இருக்கிறது. பராசக்தி படத்துக்கு முடிந்ததாக
கேள்விப்பட்டோம், சீக்கிரம் வந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஜனநாயகன்
படத்துக்கு என்ன பிரச்சனை என்று விளக்கமாக எங்களுக்கு தெரியாது என்று
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.