விஜய்யை அரசியலுக்கு தூண்டுபவர்கள் யார் தெரியுமா! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதன்மூலம் அரசியலில் நுழைய சிறிய தூண்டிலை போட்டு வருபவர் நடிகர் விஜய். ரஜினி - கமலுக்கு பிறகு அவர்களின் இடத்தின் இருப்பவர்களாக கருப்படும் விஜய் - அஜித் இருவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அப்படியாக நடிகர் விஜய் அவரது படத்தில் சமுக அக்கரையோடும் பெண்களை மையப்படுத்திய கருத்தோடும் கதையை நகர்த்தினாலும், அதில் ஒரு அரசியல் நோக்கை புகுத்தியிருப்பார். சமீபத்தில் எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை அதில் என்னை இழுக்காதீர்கள் என்று அஜித் தரப்பில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் அவரது பெயரில் இயக்கங்கள் நடைபெற்று சமீபத்தில் தேர்தலில் கூட சில இடங்களில் வெற்றிபெற்றன.
இதுகுறித்து நடிகர் சத்யராஜ் சில் ஆண்டுகளுக்கு முன் மேடை பேச்சில் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை பற்றி பேசியுள்ளார். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களைப் போல விஜய் வெளிப்படையான அரசியல் நகர்வுகள் எதையும் செய்யவில்லை. ரசிகர்கள் மூன்று விதமான ஆடியன்ஸ்களை கொண்டுள்ளனர். ஏ, பி, சி என்ற மூன்று செண்டரில் ரசிகர்கள் எண்ணத்தை நட்சத்திரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
உங்களை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு என்ன தான் செய்யப்போகிறீர்கள் என்று மேடையிலேயே கேட்டுள்ளார். இதேபோல் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி கூட விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இப்படி விஜய்யை அரசியலில் தூண்டி விடுபவர் அவரது அப்பா எஸ் ஏ சி மட்டுமில்லை மற்றவர்களும் தான் என்று தெரிய வருகிறது.