விஜயெல்லாம் ஓரம் போ! டாப் ஸ்டார் பிரஷாந்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்
Prashanth
Vijay
By Karthick Raja
நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளிவந்தது.
கொஞ்சம் சுமார் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் மறுபுறம் கொண்டாட்டத்திற்கு குறைவும் இல்லை. இந்த பாடலில் விஜய், பிரஷாந்த், பிரபு தேவா மூவரும் இணைந்து மாஸாக நடனமாடியுள்ளனர்.

ஆனால், விஜய் மற்றும் பிரபு தேவாவை ரசிகர்கள் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. டாப் ஸ்டார் பிரஷாந்தின் நடனம் தான் வேற லெவல் என கூறி ரசிகர்கள் அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து பிரஷாந்த் இடம் இருந்து இப்படியொரு நடனத்தை பார்க்கிறோம், கண்டிப்பாக திரையரங்கில் கொண்டாட்டம் வெறித்தனமாக இருக்க போகிறது என கூறி வருகிறார்கள்.
top star #Prashanth ? pic.twitter.com/E2zJGMLbrP
— VSV Cinemas (@vsvcinecreation) April 15, 2024