அஜித்தாவது, ரஜினி விஜய்யாவது நாங்க தான் கிங், தமிழக டாஸ்மாக் தீபாவளி வியாபாரம்

Tasmac
By Jeeva Nov 05, 2021 06:11 AM GMT
Report

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் எப்பொழுதும் போல் இயங்கியது. இந்த செய்தி மதுபிரியர்களுக்கு தீபாவளிக்கு போனஸ் கிடைத்தது போன்றது என்றே சொல்லலாம்.

இதன்படி தீபாவளி நாளன்று மட்டும் ரூ.225.42 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதற்கு முந்தைய நாளான புதன்கிழமையன்று ரூ.205.61 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் ரூ.431.03 கோடிக்கு தீபாவளி நாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபிரியர்கள் மது அருந்தியுள்ளனர்.

இந்த செய்தி ஊடகத்தில் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் இதுக்கப்புறமாவது பெட்ரோல் டீசல் விலை குறைப்பீங்களாங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.