இப்படியொரு நெருக்கமான ஆட்டமா! லீக்கான விஜய் ராஷ்மிகா புகைப்படம்..

Vijay Rashmika Mandanna Varisu
By Edward Aug 22, 2022 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பிஸியாக சென்று கொண்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் எப்படியாவது லீக் செய்து விடுகிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்து விஜய் எங்கு சென்றாலும் சரி ஷூட்டிங் ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் வீடியோ வரை வெளியாகி விடுகிறது. அப்படி சமீபத்தில் மருத்துமனை காட்சிகள் கூட சமுகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் நெருக்கமாக சிகப்பு ஆடையில் நடிகர் விஜய் ஆடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ரொமாண்டிக் நடனத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தால் படக்குழுவைவிட விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

GalleryGallery