அஜித்துடன் நடிக்க மாட்டேன்! தளபதி ஒதுக்கி விட்டார் என்று கூறிய நடிகையின் கணவர்
தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்களாக ரஜினி - கமல் ஹாசனுக்கு அடுத்து அந்த இடத்தினை பிடித்தவர்கள் விஜய் - அஜித். பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கும் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று பலர் பலவிதமான கருத்துக்களை கொடுத்து வருகிறார்கள்.
அவர்களை வைத்து பல இயக்குனர்களும் ஸ்கிரிப் எழுதியும் வந்துள்ளனர். இதை நிறைவேற்ற பாதி அளவிற்கு வரை சென்ற இயக்குனர் ராஜகுமாரன். தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் அஜித் விஜய் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நீ வருவாய் என படத்தில் அஜித், பார்த்திபன் நடித்திருப்பார்கள். பார்த்திபனுக்கு பதில் நடிகர் விஜய்யை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் அதை வேண்டாம் என்றும் சில காரணங்களால் விஜய் ஒதுக்கி விட்டராம். அந்த சமயத்தில் அஜித்திற்கு கார் விபத்து ஏற்பட்டு படுத்தை படுக்கையில் இருந்து தான் கதையை கேட்டார் என்றும் கூறியுள்ளார் ராஜகுமாரன்.