பாதி கதையை கேட்டு சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. இயக்குநர் சொன்ன தகவல்

Vijay Vishal Actors N. Lingusamy
By Kathick Feb 23, 2025 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், மாபெரும் வெற்றியடைந்த திரைப்படத்தை தவறவிட்ட கதையை உங்களுக்கு தெரியுமா.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர்ஹிட் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம்தான் சண்டைக்கோழி.

பாதி கதையை கேட்டு சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. இயக்குநர் சொன்ன தகவல் | Vijay Rejected Superhit Movie

இப்படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்க, விஷால், மீரா ஜாஸ்மின், லால், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருந்தனர். சரி இப்படத்தை எப்படி விஜய் நிராகரித்தார் என்பதை பற்றி இயக்குநர் லிங்குசாமியே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதில் "சண்டக்கோழி ஸ்கிரிப்ட் முடிந்ததும் விஜய் சார் கிட்ட சொல்ல போனேன். முதல் பாதி கதையை கேட்டதும் போதும்னு நிறுத்திட்டார். முழுசா கேட்ருங்கண்ணா என கூறினேன். ராஜ்கிரண் மாதிரி ஒருத்தர் உள்ளே இப்படத்தில் வந்தபிறகு எனக்கு இதுல என்னண்ணா இருக்குன்னு சொல்லிட்டார். அடுத்து சூர்யாகிட்ட போனேன். அதுவும் நடக்கல. நம்மகிட்ட ஒருத்தன் இருக்கும்போது ஏன் வெளியில தேடணும்னு அதை விஷாலுக்கு பண்ணினேன்" என கூறியுள்ளார்.