ரஜினிக்கு 4 நாட்களுக்கு பின் நன்றி தெரிவித்த விஜய்!! இதுதான் காரணமா?

Rajinikanth Vijay Gossip Today Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Jai May 13, 2026 02:30 PM GMT
Report

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, சினிமா பிரபலங்கள் முதல் யூடியூப் பிரபலங்கள் வரை இதுகுறித்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், விஜய் முதலமைச்சராகியுள்ளது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

ரஜினிக்கு 4 நாட்களுக்கு பின் நன்றி தெரிவித்த விஜய்!! இதுதான் காரணமா? | Vijay Responds To Rajinikanth After 4 Days Wishes

அதற்கு ரஜினிகாந்த் கைக்கூப்பி, சிரித்தபடி சென்றது இணையத்தில் வைரலானது. பலரும் தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்கு விஜய் சோசியல் மீடியாக்களில் நன்றி தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்தபோது பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தமிழக மக்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வந்தனர்.

ரஜினிக்கு 4 நாட்களுக்கு பின் நன்றி தெரிவித்த விஜய்!! இதுதான் காரணமா? | Vijay Responds To Rajinikanth After 4 Days Wishes

அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும் அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

ஆனால், ரஜினிகாந்தின் இந்த வாழ்த்துக்கு விஜய், சுமார் 4 நாட்கள் கழித்து தான் தன்னுடைய பதிலை வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே விஜய் - ரஜினிகாந்த் இடையே நேரடி மோதல் இல்லாதபோதிலும் ரசிகர்கள் மத்தியில் நீண்டகால போட்டி நிலவி வருகிறது. அதேபோல், விழாக்களில் ரஜினி - விஜய் காக்கா - கழுகு கதை கூறிவது இருவருக்கும் இடையேயான பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதில் ஒரு பக்கம், அரசியல் பொறுப்புகளில் பிஸியாக இருந்ததால் தாமதம் ஆகியிருக்கலாம் என்றும், மற்றொரு பக்கம் இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் கணக்கு இருக்கிறதா? என்ற கேள்வியையும் கேட்டு வருகிறார்கள்.