இதைதவிர விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஒன்னும் தெரியாது? மருமகள் குறித்து விஜய் அம்மா ஓப்பன்

Vijay S. A. Chandrasekhar Sangeetha Vijay
1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது வாரிசு நடத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தும் வருகிறார்.

அப்படி புகழ் பெற்று வரும் விஜய் அம்மா, அப்பா விசயத்தில் கண்டுகொள்ளாமல் பல விசயங்களை செய்து வருவது கஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் விஜய் மாதத்தில் ஒருமுறை எங்களுடன் நேரத்தை செலவிட்டு அன்பாக பேசவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

இதைதவிர விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஒன்னும் தெரியாது? மருமகள் குறித்து விஜய் அம்மா ஓப்பன் | Vijay S Mother Shoba Open Up Sangeetha

இதன்பின் விஜய் பற்றி எஸ் ஏ சந்திரசேகர் பல இடங்களில் ஓப்பனாக பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் அப்பாவின் வீட்டினை ஜப்தி செய்ய ஆணையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2011ல் சந்திரசேகர் இயக்கத்தில் குற்ற பரம்பரை படம் வெளியானது. இப்படத்திற்காக விளம்பரத்திற்கு மட்டும் 76 ஆயிரம் செலவாகியிருந்தது. அதனை அவர் கொடுக்காமல் இருந்து வந்ததால் அந்த நிறுவனம் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த விசாரணையில் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டின் பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டனர். ஆனால் விஜய் இதுகுறித்து எந்தவொரு முடிவும் எடுக்காமல் வந்துள்ளது தான் அதிர்ச்சியாகவுள்ளது. இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா, விஜய்யின் மனைவி சங்கீதா பற்றி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைதவிர விஜய் மனைவி சங்கீதாவுக்கு ஒன்னும் தெரியாது? மருமகள் குறித்து விஜய் அம்மா ஓப்பன் | Vijay S Mother Shoba Open Up Sangeetha

அவர் கூறியது, நானும் சங்கீதாவும் மாமியார் மருமகள் என்று கூறுவதைவிட நல்ல நண்பர்கள் என்று தான் கூறவேண்டும். வீட்டையும் குழந்தையையும் கவனித்து கொள்வதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது என தெரிவித்தார். வீடு, குடும்பத்தை தவிர சங்கீதாவுக்கு ஒன்றும் தெரியாது.

நல்ல மருமகளாகவும் திகழ்ந்து வருவார் என்று கூறியுள்ளார். பேரன் பேத்தி இருவரும் அமைதியானவர்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் தற்போது சங்கீதா, விஜய் அவர்களை கண்டுகொள்வதே கிடையாதே என்று நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.