ஆளுநர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார் C ஜோசப் விஜய்..
Vijay
Chief Minister of Tamil Nadu
Thamizhaga Vetri Kazhagam
By Jai
தவெக தலைவர் விஜய்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து பெரும்பான்மையுடன் தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்ற அறிவுப்பு வந்ததும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய் பதவியேற்பு ஏற்பாடுகள் செயப்பட்டது. தற்போது தவெக தலைவர் C ஜோசப் விஜய்க்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
C ஜோசப் விஜய் எனும் நான்
C ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர். C ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் ஆர்பரித்து தங்கள் முதலமைச்சரை வரவேற்றனர்.