வளர்த்துவிட்ட அப்பா, வெச்சு செய்யும் மகன்.. தொடரும் விஜய், எஸ்.ஏ. சந்திரசேகர் சண்டை..
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இதன்பின் சில படங்கள் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்தார். மேலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார் விஜய்.
கடந்த ஆண்டு விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிகப்பெரிய சர்ச்சை இணையத்தில் கிளம்பியது. இதனால், கடந்த சில வருடங்களாகவே தாய் தந்தை இருவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறாராம் விஜய் என்றும் கூறப்பட்டது. அரசியலில் விஜய்யை ஈடுபடுத்த வேண்டும் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் முடிவெடுத்தாராம்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த விஜய்யை எதிர்த்து கட்சியை துவங்கினார் எஸ்.ஏ. சந்திரசேகர். இதனால் கடுப்பான விஜய் எனக்கும், அந்த கட்சிக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் சண்டை பெரிதானது. மேலும் தற்போது சண்டை ஒயித்திருந்தாலும், மீண்டும் அனைவருக்கும் நியாபகம் வரும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விஜய்.
ஆம், தனது தாய் ஷோபாவுடன் இணைந்து இன்று புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஏன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் புகைப்படம் எடுக்கவில்லை. இன்னும் உங்க சண்டை தொடர்கிறதா..? என்று கேட்க துவங்கிவிட்டனர். கூடிய விரைவிலாவது இதற்கு விஜய் ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று..
