என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார்!! மீண்டும் நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா..

Vijay Trisha Gossip Today Sangeetha Vijay Divorce
By Edward Mar 07, 2026 06:45 AM GMT
Report

விஜய்

விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவர் ஒரு நடிகை உடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என அவர் புகார் தெரிவித்து இருந்தார். விஜய் அந்த சர்ச்சையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். விஜய்க்கு ஆதரவாகவும் பேசினர். ஆனால் தற்போது விஜய் செய்திருக்கும் செயலை விஜய் ரசிகர்களே கண்டித்து வருகிறார்கள்.

பிரபல தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமணம் நடைபெற்றது. அதற்கு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கினார்கள். அவர்கள் மேட்சிங் உடையில் வந்து மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு வீடியோ இணையத்தில் பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சங்கீதா

இந்நிலையில் சங்கீதா மீண்டும் ஒரு புதிய மனுவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

அந்த மனுவில் சங்கீதா, பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடு இல்லாமல் தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் சங்கீதா.