விஜய், சங்கீதா பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணமா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..
சினிமாத்துறையில் இருக்கும் நட்சத்திரங்கள் பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்தாலே போதும் அதை பற்றி இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் உலாவரும். அப்படி தான் நடிகர் விஜய் குறித்த தனிப்பட விசயங்கள் பற்றி பல செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது. வாரிசு படத்தின் ஆடியோ லான்சிற்கு அவரது மனைவி சங்கீதா வராமல் இருந்திருக்கிறார்.
இதனால் விஜய்க்கு சங்கீதாவுக்கு பிரச்சனை என்றும் விரைவில் விவாகரத்து என்றும் செய்திகள் பரவியது. இதுகுறித்து பல சினிமா விமர்சகர்கள், விஜய் - சங்கீதா பிளவுக்கு நடிகை திரிஷாவுடன் பல ஆண்டுகள் கழித்து நடித்தது, மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் சங்கீதா, விஜய்யை விட்டு பிரிந்துள்ளார் என்று கூறப்பட்டது.
இதற்கேற்ப லியோ படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜய் - திரிஷா ஜோடியாக வெளியில் சென்றது. லியோ படத்தில் விஜய்-க்கு திரிஷா லிப் லாக் முத்தம் கொடுத்தது என்று பல சர்ச்சைகள் எழுந்தது. இதெல்லாம் தான் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் பிரிந்துவிட்டார் என்ற செய்திகள் வைரலானது.
இந்நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் விஜய் - சங்கீதா பிரிவு பற்றி பேசியுள்ளார். ரசிகர் ஒருவர் விஜய் - சங்கீதா பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணமா? திரிஷா திருமணம் செய்துவிட்டாரா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதற்கு சித்ரா லட்சுமணன், விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, அப்படி இருக்க அவர்கள் பிரிவுக்கு நடிகை தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். திரிஷாவை பொறுத்தவரையில் இன்னும் திருமணமாகவில்லை என்று கூறியிருக்கிறார்.