கங்குவா படத்தின் தோல்வி குறித்து கேள்வி.. கடுப்பான விஜய் சேதுபதி
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் கவுதம் மேனன், ராஜிவ் மேனன், பவானி, சேத்தன், தமிழ் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து வெற்றியடைந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர்.
விஜய் சேதுபதி பதில்
இந்நிலையில், படம் குறித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் கங்குவா படத்தின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கேள்வியால் கடுப்பான விஜய் சேதுபதி " நான் விடுதலை படத்தை குறித்து மட்டும் தான் இங்கு பேச வந்துள்ளேன். மேலும், அனைத்து படங்களுமே வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக தான் எடுக்கப்படுகிறது.
தோல்வி என்பது எல்லா நடிகர்களுக்கும் வரும் ஏன் எனக்கும் வந்திருக்கிறது. என்னையும் ட்ரோல் செய்திருக்கிறார்கள். சினிமாவில் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று பதிலளித்துள்ளார்.