சர்ச்சையை கிளப்பிய 3-ஆம் பாக வெப்சீரிஸில் விஜய் சேதுபதியா? சன்னியை மாட்டிவிட்ட நிலை!.

samantha vijaysethupathi thefamilyman2 familyman3 manojpajpei
By Edward Jun 20, 2021 06:30 PM GMT
Report

தமிழர்களை அவமதிக்கும் காட்சிகள் இடம் பிடித்து இருப்பதாலும் சில சர்ச்சை காட்சிகள் அமைந்திருப்பதால பல கண்டனங்களையும் எதிர்ப்புகளை கிளப்பியது தி பேமிலி மேன் 2 வெப் தொடர். நடிகை சமந்தா, நடிகர் மனோஹ் பாஜ்பேய் நடித்த இத்தொடர் அமேசான் தளத்தில் வெளியிடக்கூடாது என்று கூறியும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

ஆனால் சில நல்ல கருத்துக்கள் இருந்தபோதிலும் இப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் என்று நடிகர் மனோஜ் பாஜ்பேய் கூறியுள்ளாராம். ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கிய இப்படத்தின் 3ஆம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்துள்ளனர் சிலர்.

விஜய் சேதுபதி ராஜ் மற்றும் டிகே இயக்கவிருக்கும் சன்னி படத்தில் தான் முதன் முதலாக வெப் தொடரில் கமிட்டாக கேட்டுள்ளார்களாம். ஆனால் அது சன்னி அல்ல பேமிலி மேன் 3 தான் என்று பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக படத்தின் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் பேமிலி மேன் 2 ஆம் பாகத்தில் இலங்கை போராளிகள் அமைப்பின் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார்களாம். ஆனால் விஜய் சேதுபதி புறக்கணித்து மைம் கோபியை சிபாரிசு செதுள்ளாராம்.