விஜய்பட நடிகரின் அப்பாவுக்காக சம்பளமே வேண்டாம் என கூறிய விஜய் சேதுபதி! அதுவும் இப்படியான படமாம்..

vijaysethupathi santhanu bhakyaraj shortfilm
By Edward Oct 04, 2021 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பட்டப்பெயரோடு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் சேதுபதி. ஒரே ஆண்டில் பல படங்களில் நடித்து வெளியிட்டு வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் லாக்டவுனிற்கு பிறகு திரையரங்குகளில் படங்கள் வெளியானதையொட்டி அவரது லாபம் படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது.

இதையடுத்து அனபெல் சேதுபதி, துக்ளக் தர்பார் படங்களும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது கைவசம் நடிகர் கமலுக்கு வில்லனாக விக்ரம் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் அவரது இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடிக்க யோசனையை கூறியுள்ளார்.

அதற்கான கதையை கூறிய பாக்யராஜிடம் சம்மதமும் கூறியுள்ளார். மெலும் கதையை கேட்டதும் சம்மதம் தெரிவித்ததோடு அப்படத்துஇல் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

இப்படத்தினை போன்று, நான்கு குறும்படங்களுக்கான கதையைத் தயார் செய்துவிட்டு அதிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து அதை ஒரு ஆந்தாலஜி படமாக திரையரங்கத்திலோ, ஓடிடி தளத்திலோ வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.