இரண்டு பெண்களுடன் விஜய் சேதுபதி இதை செய்து வருகிறார்..

Vijay Sethupathi
By Kathick Jan 30, 2023 12:45 PM GMT
Report

மக்கள் செல்வன் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வருகிற 3ம் தேதி மைக்கேல் எனும் படம் வெளிவரவுள்ளது. விஜய் சேதுபதியின் கைவசம் பல படங்கள் உள்ளதை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களுக்கு எதிர்பார்க்காத ஷாக் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நடிகர் விஜய் சேதுபதி கதை கேட்கும் பொழுது தன பக்கத்தில் இரு பெண்களை வைத்துக்கொண்டு தான் கதை கேட்கிறாராம்.

கதை கூறும் இயக்குனர்களிடம் அந்த இரு பெண்களை பார்த்து கதை கூறுங்கள் என்று தான் விஜய் சேதுபதி சொல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லித்தரும் பயிற்சியாளர்களாம். அதனால் தான் அவர்கள் இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே கதை கேட்டு வருகிறாராம் விஜய் சேதுபதி.