இதெல்லாம் ஒரு கேள்வியா...பொது இடத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi
Katrina Kaif
By Tony
விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இவர் மற்றும் கேத்ரீனா கைப் நடிப்பில் மேரி கிறிஸ்துமஸ் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில் ஒரு பத்திரிகையாளர், ஹிந்தி படத்தில் நடிக்கிறீர்கள், ஆனால், தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க கூடாது என்கிறார்களே என்று கேட்க, விஜய் சேதுபதி கொந்தளித்து விட்டார்.
உடனே, இதெல்லாம் ஒரு கேள்வியா? இந்த இடத்திற்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்மந்தம். ஹிந்தி படிக்க கூடாது என்று தமிழ் நாட்டில் யாரும் சொல்லவில்லை, ஹிந்தி திணிப்பு வேண்டாம் என்று தான் சொல்கிறார்கள் என பதிலடி கொடுத்தார்