விஜய் சேதுபதியால் பயந்து போன சிம்பு! இதுதான் காரணம் என்று கூறிய நடிகர் REWIND
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து போதிய வரவேறு இல்லாமல் தனித்து விடப்பட்ட நடிகராக இருந்தவர் நடிகர் அருண் விஜய். வாரிசு நடிகராக இருந்தாலும் தன் உழைப்பால் இந்த இடத்தினை பிடித்துள்ளார். பல படங்கள் தோல்வியானாலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
அவரின் சினிமா வாழ்க்கையில் பெரிய பேர் கொடுத்து பிரபலப்படுத்திய படம் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால். இப்படத்தில் வில்லனாக நடித்து நல்ல வரவேற்பு பெற்ற அருண் விஜய் முன்னணி இயக்குநர்கள் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இயகுநர் மணிரத்னம் இயக்கி வெளியாகிய படம் செக்கசிவந்த வானம்.
அப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார். அதில், கார் சீன் மிகக்கடுமையாக பெரிய ஷாட்கள் அமைக்கப்பட்டு 4 கேமராக்களுடன் எடுக்கப்பட்டது. கார் சீனில் சிம்பு கொஞ்சம் விஜய் சேதுபதி கார் ஓட்டுவதற்கு பயந்தார் என்றும் நான் சரியாக ஓட்டுவேன் பயப்படவேண்டாம் என கூறி ஒருமுறை பயமுறுத்திவிட்டார். இதனால் சிம்பு பய்ந்துள்ளார் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.