பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்..வியானாவுக்கு குறும்படம்!! வெச்சு செய்த விஜய் சேதுபதி..
பணப்பெட்டி
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் இப்படி செய்தது பலர் பாராட்டினாலும் சிலர் டைட்டில் ஜெயிக்க வேண்டியவர் இப்படி செய்திருக்க கூடாது என்றும் கூறி வருகிறார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என 5 பேர் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியானாவுக்கு குறும்படம்
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரமோ வீடியோவில் விஜய் சேதுபதி, இந்த சீசனின் கடைசி குறும்படத்தை போட்டுக்காட்டியிருக்கிறார். அதில், வியானா, பிளான் பண்ணி எடுக்க வெச்சிட்டு, சைக்காஸ்டிக்கா சிரிக்கிறார்கள் என்றும் பிரவீன், சபரி முகத்தில் ஃப்ரீஸ் முகத்தை பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளனர்.

இதற்கு விஜய் சேதுபதி, எதை வைத்து பார்த்து பிளான் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டு முகத்தை உடைத்திருக்கிறார். ஏற்கனவே அரோரா, திவ்யா இருவரும் கானா வினோத்தை பிளான் பண்ணி பணபெட்டியை எடுக்க வைத்துவிட்டார்கள் என்று சிலர் கூறி வரும் நிலையில், இதற்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.