தேவையில்லாமல் சோயாவை பேக்கு என கலாய்த்த CWC 5 இர்ஃபான்!! நோஸ்கட் கொடுத்து ஆஃப் செய்த விஜய் சேதுபதி
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்வித் கோமாளி 5 நிகழ்ச்சி. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர் நடித்த மகாராஜா படத்தின் பிரமோஷனுக்காக குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த எபிசோட் மக்கள் மத்தியில் அதிகமாக கவர்ந்த நிலையில் விஜய் சேதுபதி, குக் வித் கோமாளி 5ன் போட்டுயாளர் இர்ஃபானை நோஸ்கட் செய்து கலாய்த்திருக்கும் விஷயம் நடந்துள்ளது. வெகுளித்தனமாக இருக்கும் போட்டியாளரும் டிடிஎஃப் வாசனின் காதலியுமான சோயாவிடம் நீங்கள் டைரக்டர்னு கேள்விப்பட்டேன் என்று விஜய் சேதுபதி கேட்டிருக்கிறார்.
அதற்கு சோயா, ஆன் என்று சொல்லி, சில குறும்படங்களை காட்டியிருக்கிறார். இதற்கிடையில் புகுந்த இர்ஃபான், இவள பார்த்தா, ஒதெல்லாம் பண்ற மாதிரியா தெரியுது என்று கமெண்ட் அடித்திருக்கிறார். உடனே விஜய் சேதுபதி திறமைக்கும் தனியான முகம் என்று ஏதாவது இருக்கிறதா. சோயாவிடம் நிறைய திறமை இருக்கிறது.
ஆனால் அவர் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் நீங்கள் கலாய்பதற்காக ஸ்பேஸ் கொடுத்து இருக்கிறார். ஏன் அவரை லூசு என்று சொல்கிறீர்கள், தன் திறமையை காட்ட ஆரம்பித்தால் அவருக்கான ஸ்பேஸ் இந்த நிகழ்ச்சியிலேயே இடைக்கும் என்று மூஞ்சில் அடித்ததை போல் பதில் கொடுத்து நோஸ்கட் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.