கீர்த்தி ஷெட்டி ரொமான்ஸ் செய்ய மறுத்து நடிகர்.. இப்படியொரு காரணமா?

Vijay Sethupathi Krithi Shetty Actors Tamil Actors Tamil Actress
By Dhiviyarajan Jun 07, 2024 12:44 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். ஒரு படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் நடிக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி ரொமான்ஸ் செய்ய மறுத்து நடிகர்.. இப்படியொரு காரணமா? | Vijay Sethupathi Not Interested With Krithi Shetty

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, தெலுங்கில் வெளியான உப்பேனா படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்தேன். இந்த படத்திற்கு பின்பு நான் தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆனேன்.அ ந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டனர்.

இதை அறிந்த நான் உடனடியா படுக்குழுவிற்கு அழைத்து, கீர்த்தி ஷெட்டிகு அப்பாவாக நடித்துவிட்டேன்.அவர் எனக்கு மகள் போன்றவர். அவருடன் எனக்கு ரொமான்டிக்காக நடிக்க முடியாது. அதனால் அவரை ஹீரோயினாக போட வேண்டும் என்று சொன்னதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.