தன்னை இது பாதிக்காது!! பெண் பாலியல் குற்றச்சாட்டுக்கு அதிரடி முடிவெடுத்த விஜய் சேதுபதி..

Vijay Sethupathi Sexual harassment Gossip Today Actress
By Edward Aug 01, 2025 03:45 PM GMT
Report

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பாலிவுட் நடிகராகவும் அறிமுகமாகி புகழ்பெற்று வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடிப்பில் தலைவன் தலைவி படம் ரிலீஸாகி 50 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது.

தன்னை இது பாதிக்காது!! பெண் பாலியல் குற்றச்சாட்டுக்கு அதிரடி முடிவெடுத்த விஜய் சேதுபதி.. | Vijay Sethupathi Refutes Harassment Allegations

இந்நிலையில் பெண் ஒருவர் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரம்யா மோகன்

ரம்யா மோகன் என்பவர் தனது எக்ஸ் தளத்தில், கோலிவுட்டில் நடைபெறும் நடிகைகள் தேர்வில், பாலியல் தொல்லை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். அதில் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது பெண் மறுவாழ்து மையத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

தன்னை இது பாதிக்காது!! பெண் பாலியல் குற்றச்சாட்டுக்கு அதிரடி முடிவெடுத்த விஜய் சேதுபதி.. | Vijay Sethupathi Refutes Harassment Allegations

மேலும் கேரவனுக்கு வரும் அப்பெண்ணிற்கு ரூ. 2 லட்சமும் கேரவனை ஓட்டுபவருக்கு 50 ஆயிரமும் கொடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து சில நேரத்திலேயே அந்த எக்ஸ் பதிவினை ரம்யா மோகன் நீக்கியதோடு எக்ஸ் கணக்கையும் நீக்கியிருக்கிறார்.

அதிரடி முடிவு

இதுதொடர்பாக பதிலளித்த விஜய் சேதுபதி, தன்னைப்பற்றி தனக்கு தெரியும், இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் தன்னை பாதிக்காது. ஆனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், இதுதொடர்பாக சைபர் கிரைமில் புகாரளித்திருப்பதாக கூறினார்.

மேலும் தன்னை பற்றி தெரிந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை பார்த்து சிரிப்பார்கள், சிலநிமிட புகழுக்காக கவனம் ஈர்க்க அந்த பெண் செய்துள்ளார் என்று விஜய் சேதுபதி இதுகுறித்து பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார்.