லீடர்னா என்னன்னு தெரியாம,புரியாம!! விஜய் சேதுபதி யாரை கூறுகிறார்?

Vijay Sethupathi Bigg Boss Gossip Today C Joseph Vijay Bigg Boss 10 Tamil
By Jai Sep 13, 2026 04:45 AM GMT
Report

லீடர்னா என்னன்னு

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் இன்றை பிரமோ வீடியோவில் விஜய் சேதுபதி, லீபர்ஷிப் பற்றிய பேசிய விஷயம் இணையத்தில் காரசாரமாக பேசு பொருளாகியுள்ளது.

முதல் வாரத்தில் தலைவராக பொறுப்பேற்ற சாதிகாவிடம், லீடர்னா என்னன்னு தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடுவது லீடர்ஷிப்புக்கான குவாலிட்டி இல்லை, ஏமாற்று வேலை என்று பேசினார் விஜய் சேதுபதி.

லீடர்னா என்னன்னு தெரியாம,புரியாம!! விஜய் சேதுபதி யாரை கூறுகிறார்? | Vijay Sethupathi Remark On Leadership Vijay Fans

இதனை பார்த்த பலரும் விஜய் சேதுபதி, விஜய்யை தான் தாக்கி பேசுகிறார் என்று விமர்சித்து வருகிறார்கள். எதனால் உங்கள் வாக்குறுதிகள் செய்யப்படவில்லை, எந்த பிரச்சனை வந்தாலும் அந்நேரத்தில் சரியாக முடிவெடுக்க வேண்டும்.

பிரச்சனை வந்ததும் ஓடிப்போகக்கூடாது என்று மீண்டும் அழுத்தமாகவும் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இதனை பலரும் யாரை குறிவைத்து அவர் பேசினார் என்று ஒருசில சோசியல் மீடியாக்களில் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.