தொப்பை காட்டி இப்படி நடிக்க வைத்தார் இயக்குனர்! பயத்தில் ஆடிப்போன விஜய் சேதுபதி..

Vijay Sethupathi Lokesh Kanagaraj Vikram Movie
By Jai Jun 21, 2022 12:10 PM GMT
Report

தென்மேற்கு பருவகாற்று படத்தின் மூலம் பலரால் அறியப்பட்டவர் நடிகர் விஜய் சேதுபதி. துணை நடிகராக ஒருசில படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக மக்கள் செல்வனாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த படங்கள் போதிய வரவேற்பு பெறாமல் போனது.

வில்லன் அவதாரம்

அதேசமயம் வில்லனாக விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தின். சமீபத்தில் கூட கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் விக்ரம் படத்தில் போதைபொருள் விற்கும் ஏஜெண்ட்டாக நடித்தார்.

வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் எண்ட்ரி காட்சி மிகப்பெரியளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதில் சட்டை இல்லாமல் டேட்டூவை காட்டி நடந்து வருவார். அந்த சீன் பற்றி விஜய் சேதுபதி பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விக்ரமில் பயத்தை காட்டிய சீன்

முதல் அந்த சீனில் சட்டையில்லாமல் நடிக்க பயந்து போனேன். லோகேஷ் கனகராஜிடம் பனியன் போட்டு நடிக்கட்டுமா? சட்டை இல்லாமல் தொப்பையோடு இருந்தால் கிண்டல் செய்வார்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினேன்.

ஆனால் லோகேஷ் ஒற்றுக்கொள்ளவில்லை. இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினார். இயக்குனரின் எதிர்ப்பார்ப்பு படத்தில் முக்கியம் என்று பயத்தோடு தான் அந்த காட்சியில் நடித்தேன் என தெரிவித்துள்ளார்.

Gallery