அப்பா வேற நான் வேற!! நடிகராகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா கூறிய பதிலடி..

Vijay Sethupathi Tamil Actors
By Edward Nov 24, 2023 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் பாலிவுட் வரை சென்று மாஸ் காட்டி வரும் வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதிபதியின் மகன் சூர்யா முதன் முதலாக நடிகராக கலமிரங்கியுள்ளார். ஸ்டெண்ட் மாஸ்டர் அனல் அரசு தயாரித்து இயக்கும் Phoenix வீழான் என்ற படத்தின் பூஜை இன்று துவங்கப்பட்டது.

அப்பா வேற நான் வேற!! நடிகராகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா கூறிய பதிலடி.. | Vijay Sethupathi Son Suriya Open Talk About Intro

பூஜை முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சூர்யா மற்றும் அனல் அரசு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் சூர்யாவிடம் அப்பா சிபாரிசால் தான் வாய்ப்பு கிடைத்ததா, அப்பா என்ன சொன்னால் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சூர்யா, ஜவான் படத்தில் அப்பா நடித்த போது அவருக்கு சாப்பாடு கொடுக்க சென்றேன். அப்போது, சண்டைக்காட்சி பார்க்கும் போது அங்கிருந்த அனல் அரசு சார் பார்த்து தன் கதைக்கு சரியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

கமல் ஹாசனா வேண்டவே வேண்டாம்!! கண்டீசன் போட்ட சினேகாவை ஓகே செய்த ஆண்டவர்..

கமல் ஹாசனா வேண்டவே வேண்டாம்!! கண்டீசன் போட்ட சினேகாவை ஓகே செய்த ஆண்டவர்..

இதன்பின் பேசிய அனல் அரசு, சூர்யா பாக்ஸிங் கற்றுக்கொண்டு கொண்டதால் என் கதைக்கு சரியாக இருப்பார் என்பதால் ஓகே செய்தேன் என்று தெரிவித்தார்.

அப்பா என்ன சொன்னாரு என்ற கேள்விக்கு, அப்பா வேற நான் வேற, அதனால் தான் படத்தில் அப்பா பெயரை குறிப்பிடாமல் வெறும் சூர்யா என்று போட்டிருக்கிறார்கள். அப்பா, அம்மா சந்தோஷப்பட்டார்கள். சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை தானே என்று கூறியிருக்கிறார் சூர்யா.

மேலும், விஜய் சேதுபதி மலேசியா ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் வரமுடியவில்லை, வீடியோக்காலில் வாழ்த்து கூறினார் என்று அனல் அரசு தெரிவித்துள்ளார்.