கார்த்தி நடிப்பை காப்பி அடித்த விக்ரம் பட இயக்குனர்.. இதை ஆயிரத்தின் ஒருவன் படத்திலையே பாத்தாச்சு..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து நல்ல வரவேற்பு பெற்றது. 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த இப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் லோகேஷ் கனகராஜ் நல்ல வரவேற்பும் பெற்றார்.
மல்டிவெர்சன் படங்களாக இயக்கி வரும் லோகேஷ் பழைய கமல் படங்களில் உள்ள சில நுணுக்கமான காட்சிகளையும் அம்சங்களையும் வைத்திருப்பார். அந்தவகையில், விஜய் சேதுபதியின் எண்ட்ரி காட்சி பழைய கமல் ஹாசன் படத்தில் நடித்ததை போன்று அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டது.
தற்போது விஜய் சேதிபதியின் எண்ட்ரி, ஆயிரத்தில் ஒருவன் நடிகர் கார்த்தி எண்ட்ரி போல் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். கார்த்தி ஆயிரத்தின் ஒருவன் படத்தில் காரில் ஜென்னல் வழியாக வெளியே வருவார்.
அதேபோல் கையின் இடையில் சட்டையை வைத்து நடந்து செல்வார். அதேபோல் தான் விஜய் சேதுபதியும் விக்ரம் படத்தில் நடந்து வருகிறார். இதை நாங்க எப்பவோ ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் வைத்து விட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.