நயன்தாரா சமந்தாவால் நான் வாழ்ந்தேனா! பொண்டாட்டி கூட விஜய் சேதுபதியை கலாய்ச்சிட்டாங்களே..

Vijay Sethupathi Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward Apr 27, 2022 06:15 AM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து நாளை வெளியாகவுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். காத்து வாக்குல ரெண்டு காதல் செய்து விஜய் சேதுபதி எப்படி அவர்களை சமாளிப்பார் என்ற கதைகளத்துடன் உருவாகியுள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக நயன் தாரா பங்கேற்க மாட்டார் என்று தெரிந்து விஜய் சேதுபதியும் விக்னேஷ் சிவனும் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்தனர்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய் சேதுபதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ரெண்டு முன்னணி நடிகைகளால் நல்லா வாழ்ந்திருக்கீங்க என்று பலர் கூறுவதை நினைத்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு விஜய் சேதுபதி, என் பொண்டாட்டியும் நல்லா வாழ்ந்திருக்கல்ல என்று சொல்லி தான் என்னை கலாய்ப்பார். நல்ல வாழ்ந்தேனா, நடிச்ச எங்களுக்கு தான் வாழ்ந்தனா கஷ்டப்பட்டனான்னு தெரியும் என்று கூறியுள்ளார்.