தளபதி விஜய்யின் தங்கையா இது? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஆரம்பகாலத்தில் இருந்த காதல் படங்களுக்கு பிறகு தற்போது மாஸ் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகர் விஜய்க்காகவே பல இயக்குநர்கள் அவருக்காவே கதையை எழுதி வருகிறார்கள்.
அந்தவகையில், தற்போது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகர் விஜய் இயக்குநர் சந்திரசேகரின் மகனாக அறிமுகமாகி அவரின் துணையில்லாமல் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
விஜய்யை பற்றி தெரிந்த பலர் அவரின் தங்கை பற்றி அறியாமல் இருப்பார்கள். தளபதி விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்துள்ளார். சில காரணங்களால் அவர் மரணமடைந்தார் என்ற சோகமும் அவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
தற்போது தாய் தந்தையுடம் விஜய் மற்றும் அவரது தங்கை எடுத்துகொண்ட குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.