ரொமான்ஸ் செய்த நடிகைக்கு ராக்கி கட்ட சொன்ன சுசித்ரா!! கொந்தளுக்கும் விஜய் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடி பிரபலமானவர் நடிகை சுசித்ரா. கார்த்திக் என்ற பாடகரை திருமணம் செய்த சுசித்ரா, திடீரென பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். சுச்சி லீக்ஸ் மூலம் பிரபலங்களில் அந்தரங்கதை வெளியிட்ட அந்த நேரம் முதல் சினிமாவில் ஒதுக்கப்பட்டு வந்தார்.
அதன்பின், மீண்டும் தற்போது சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பார்ட்டி செய்வது முன்னாள் கணவர் கார்த்திக்கின் உண்மை முகம் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்து வந்தார். மேலும், திரிஷா, விஜய் தொடர்பான விஷயங்கள் பற்றியும், ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து, ஜிவி பிரகாஷ் சைந்தவி உள்ளிட்ட பலரின் தனிப்பட்ட விஷயங்களை சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் பற்றி வீடியோவில் பேசிய சுசித்ரா கூறிய விஷயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. தற்போது விஜய்க்கு இருக்கும் ஆணிகள், வெங்கட் பிரபு கேங்க், திரிஷா, அசின், சங்கீதா போன்றவர்கள் தான். அதில் கடைசியாக நிற்பவர் தான் நடிகை ஜான்வி கபூர். அவரை சொந்தமாக்க ஜான்வி போராடுவார். இந்த ஆணிகளை எல்லாம் விஜய்க்கு குத்தாமல் இருக்க 2 பேர் உதவுவார்கள். உயிரைக்கூட கொடுக்க ரெடியா இருப்பார்கள்.
அவருக்கு கடவுளாக அனுப்பி வைத்த ஒரு தங்கச்சி இருக்கு, ஒரு தம்பியும் இருக்கான். மேலும் அழுது பேசிய சுசித்ரா, விஜய்க்கு கடவுளாக அனுப்பி வைக்கபட்ட தங்கச்சி ராஷ்மிகா மந்தனா. தம்பி லோகேஷ் கனகராஜ். இவங்கள விஜய் ஒதுக்கக்கூடாது. விஜய் உன் புத்தியே சரியில்ல, ராஷ்மிகாவுக்கு ஆகஸ்ட் 12 ஆம்தேதி ராக்கி கட்டிடு, என்று அழுதபடி பேசியிருக்கிறார் பாடகி சுசித்ரா.