மகனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மகள் புகைப்படம் வைரல்! அதுவும் இந்த நடிகருடனா!

vijay sanjay theri divya shasha motta rajendran
By Edward Jun 15, 2021 07:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். சமீபகாலமாக அரசியல் சம்பந்தமான கதை களத்தில் நடித்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் தளபதி அதை காதில் போடாமல் படத்தில் நடிப்பதை மட்டும் குறிக்கோளானக் கொண்டுள்ளார்.

அதே போல் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்த படம் தெறி. அட்லி இயக்கத்தில் சமந்தா, மீனா மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். டபிள் ஆக்ஷன் படம் போன்ற தோரணையில் தான் போஸ்டர்கள் வெளியானது.

படத்தின் இறுதி காட்சியில் விஜய் லடாக் பகுதியில் புதிய அடையாளத்துடன் தனது மகளுடன் செல்வது போன்ற காட்சி வைத்திருப்பார் இயக்குனர். அந்த வளர்ந்த மகளாக தளபதியின் மகள் திவ்யா ஷாஷா நடித்திருப்பார்.

தெறி பேபி வசனம் இன்றளவும் பிரபலம் தான். சமூகவலைத்தள பக்கங்களில் மொட்டை ராஜேந்திரன் உடன் விஜய் அவர்களின் மகள் திவ்யா ஷாஷா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் இனைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.