விஜய் மகன் சஞ்சய்-க்கு ஜோடி பிரபல நடிகையின் மகளா!! அப்பாவின் பேராசை

Vijay Devayani Gossip Today jason sanjay
By Edward Jul 12, 2023 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90-களில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் தேவயானி. அவரது மகள் இனியா சமீபத்தில் தான் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்ந்துள்ளார்.

விஜய் மகன் சஞ்சய்-க்கு ஜோடி பிரபல நடிகையின் மகளா!! அப்பாவின் பேராசை | Vijay Son Pair With Devayani Daughter Rajakumaran

நீ வருவாயா 2

இந்நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய இரண்டாம் மகள் இனியா விரைவில் சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் தான் இணைந்து நடிக்கவைக்க போவதாகவும் கூறி தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார். தேவயானி, பார்த்திபன் நடித்த ’நீ வருவாய் என’ படத்தில் முதலில் அஜித், விஜய் இணைந்து நடிக்கவிருந்தது.

ஆனால் விஜய் நடிக்காமல் போக பார்த்திபனுடன் அஜித் நடித்து கொடுத்தார். இந்நிலையில் முதல் பாகத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் ’நீ வருவாய் என’ படத்தின் இரண்டாம் பாகத்திலாவது அவரது மகனை நடிக்கவிட வேண்டும் என்றும் விஜய்யிடம் நேரடியாக கேட்கப்போவதாகவும் கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

விஜய் மகன் சஞ்சய்-க்கு ஜோடி பிரபல நடிகையின் மகளா!! அப்பாவின் பேராசை | Vijay Son Pair With Devayani Daughter Rajakumaran

இனியா ராஜகுமாரன் - ஜேசன் சஞ்சய்

தற்போது ’நீ வருவாய் என’ 2-வின் ஸ்கிரிப் ரெடியாவிட்டதாகவும் 10 பேரிடம் கதையை கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரமனின் மக்ன் கனிஷ்கா விக்ரமன் என்றும் உறுதியாக சொல்லியுள்ளார்.

ஆனால் ஜேசன் சஞ்சய் விசயத்தில் தான் முடிவெடுப்பதில்லை என்றும் அவர் விருப்பம் என்னவோ அதை செய்யட்டும் என்றும் விஜய் பேட்டியில் கூறியிருந்தார். அப்படி விஜய் ஓகே கூறினாலும் ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருவதால் நடிக்க எப்படி ஒற்றுக்கொள்வார்.

காலப்போக்கில் அது நடந்தால் ராஜகுமாரனின் ஆசையும் நிறைவேறும் குட்டி தளபதியும் உருவாகுவார் என்று ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.