விஜய் ஒருத்தர் இல்லனா சினிமா பாதிக்குமா!! நச்சுன்னு பதிலளித்த நடிகை கஸ்தூரி..
Vijay
Kasthuri
Tamil Actress
Actress
By Jai
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கஸ்தூரி, தற்போது அரசியல் மற்றும் சினிமா பற்றி இணையத்தில் பேசியும் வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலில் நுழைந்துள்ளது பற்றியும் சினிமாத்துறை பாதிக்கப்படுமா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தான் விஜய் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கிறார். சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுப்பிடித்துவிட்டார்கள்.
அதனால் ஒரு ஆளுக்காக, அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், ஏன் அமிதாப்பச்சன், லியோனார்டோ டிகாப்ரியோவாக இருக்கட்டும், ஒரு ஆளுக்காக சினிமா நிற்காது, அது கலை.
அது எல்லாருடைய பங்களிப்பால் வளருமே தவிர, பாதிப்பு என்பது அந்த கலைக்கு வராது என்று கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
