இதற்காக தளபதி கெஞ்சினாரா?பளார் பதிலளித்த நடிகர் பிரபுதேவா..

vijay prabhudeva thalapathy66 dancemaster
By Edward Dec 06, 2021 08:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின் நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு டாப் இடத்தில் இருப்பவர் பிரபுதேவா. தமிழ் முதல் இந்தி வரை இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரை எடுத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

சமீபத்தில் பிரபல இணையதள பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அமைதியாக பதிலளித்து வந்தார். அப்படி தன்னுடைய முதல் சம்பளம் மணிரத்னம் படத்திற்கு 500 ரூபாய் வாங்கியதாகவும் நடித்ததில் சிறந்த இயக்குநர் சங்கர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தளபதி 66 படத்திற்கு நடிகர் விஜய் கோரியோகிராப் பண்ண கூப்பிட்டது உண்மையா என்ற கேள்வி அது ரூமர் என்று கூறி பதிலளித்துள்ளார். விஜய் படமான போக்கிரி, வில்லு போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.