விஜய் படத்திற்கு இந்த நிலைமையா! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்

Vijay Pooja Hegde Thalapathy 69
By Kathick Jan 06, 2025 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், அரசியலுக்கு சென்றுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்துவிட்டார்.

விஜய்யின் படம் குறித்து அறிவிப்பு வந்தவுடனே, அப்படத்தின் உரிமைகள் ஒன்றின்பின் ஒன்றாக விற்பனை ஆகிவிடும். ரிலீஸுக்கு முன் லாபகரமான படமாக அது அமையும்.

விஜய் படத்திற்கு இந்த நிலைமையா! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல் | Vijay Thalapathy 69 Movie Ott Rights

இந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் OTT உரிமை இதுவரை விற்பனை ஆகாமல் இருக்கிறது என ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக OTT சரிவை சந்தித்த நிலையில், முன்னணி நட்சத்திரங்களின் படங்களை அதிக விலைக்கு வாங்க கூடாது என்கிற முடிவை எடுத்துள்ளனர்.

இதனால், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் கூட அதிக விலைக்கு விற்பனை ஆவதில்லை. தயாரிப்பு நிறுவனம் கேட்கும் தொகையை விட OTT நிறுவனம் கூறும் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் தான், இதுவரை தளபதி 69 படத்தின் OTT உரிமை விற்பனை ஆகவில்லை என கூறப்படுகிறது.